சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்தி பகவானுக்கு சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் உள்ள கருணாகரவள்ளி உடனுறை கைலாசநாதர், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் சனிப்பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. போஜீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் தீபாராதனை நடைபெற்றது. சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், மண்ணச்சநல்லூரில் பூமிநாதசுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், அழகியமணவாளம் மேற்றலீஸ்வரர் கோவில், திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில், எதுமலையில் உள்ள அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


Next Story