குப்பைகளால் சுகாதார சீர்கேடு


குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

அரியலூர் சாஸ்திரி நகரில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் அடுத்த சாஸ்திரி நகர் கள்ளக்குறிச்சி மெயின்ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலையோரம் உள்ள கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் நிறைந்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதன்மீது குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இந்த குப்பைகளை கிளறிச்செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், இதுபோன்ற சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story