பஸ் நிலையத்தில் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு


பஸ் நிலையத்தில் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x

பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் குப்பைகல் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் குப்பைகல் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ்நிலையம்

பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், மாணவர்கள், பஸ் நிலைய த்திற்கு வருகின்றனர்.

பஸ் நிலையம் அருகில் பேரணாம்பட்டு போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கிராம சாவடி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் என் குப்பை என் பொறுப்பு உள்ளிட்ட அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள ஓட்டல்கள், பழக்கடைகள், பூக்கடைகள், ஜூஸ் கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

இந்த கடைகளில் சேரும் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் பஸ் நிலையத்திலேயே தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் பேரணாம்பட்டு பஸ் நிலையம் தற்போது குப்பைக்கிடங்காக மாறியுள்ளது. மூட்டை, மூட்டையாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதன் அருகில் நகராட்சி கட்டண கழிப்பிடம் இயங்குவதால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், பயணிகள் தரப்பில் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் பஸ் நிலையத்தை தினமும் கடந்து செல்லும் நகராட்சி அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ள வில்லை. தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நோய் கிருமிகள் பரவாமல் தடுக்க தேங்கியுள்ள குப்பை மூட்டைகளை உடனடியாக அகற்றி பஸ் நிலையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story