நரிக்குறவர்கள் வசிப்பிடத்தில் சுகாதார சீர்கேடு


நரிக்குறவர்கள் வசிப்பிடத்தில் சுகாதார சீர்கேடு
x

நரிக்குறவர்கள் வசிப்பிடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

திமிரியிலிருந்து கலவை செல்லும் சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் முன்புறம் சுமார் 200 மீட்டர் தூரம் அகலமான கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு வருவதற்கான அபாயம் உள்ளது.

நரிக்குறவர்கள் பெரும்பாலும் வீட்டின் வெளியே இரவு நேரத்தில் உறங்குவது வழக்கம். கால்வாய்க்கும் இவர்கள் உறங்கும் இடத்திற்கும் சுமார் ஐந்து அடி தூரம் தான் உள்ளது. கொசுத்தொல்லையால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக திமிரி பேரூராட்சியோ அல்லது நெடுஞ்சாலைத்துறியோ உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story