சீருடை அணிந்த நிலையில் உயிரை விட்ட தூய்மை பணியாளர்


சீருடை அணிந்த நிலையில் உயிரை விட்ட தூய்மை பணியாளர்
x

சீருடை அணிந்த நிலையில் தூய்மை பணியாளர் உயிரை விட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பட்டு(வயது 53). இவர் வேப்பந்தட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சக தூய்மை பணியாளர்களிடம், தனது உயிர் பிரிந்தாலும், துப்புரவு பணியாளர் சீருடையில் இருக்கும்போதே பிரிய வேண்டும் என்று பலமுறை கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பட்டு உயிரிழந்தார். அவர் உயிர் பிரியும் நிலையில் தூய்மை பணியாளர் சீருடையிலேயே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story