தூய்மை பணியாளர்கள் சாலைமறியல்
இளம்பிள்ளை:-
வருங்கால வைப்புநிதி தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இளம்பிள்ளை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலைமறியல்
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி தொகையினை பிடித்தம் செய்யாமல் அப்படியே சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சித்தர் கோவிலில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் கே.கே.நகரில் தூய்மை பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ேபாக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத் தலைவர் தளபதி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முஸ்தபா, மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் சங்கரன் மற்றும் போலீசார் சாைல மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.