தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 1:30 AM IST (Updated: 6 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு கிராம மேல்நிலை குடிநீர்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் குருசாமி வரவேற்றார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், குழந்தைராஜ், போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.13 ஆயிரத்து 848 வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.11 ஆயிரத்து 848 மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் சந்தியாகு, இணை செயலாளர்கள் நந்தகோபால், பழனிசாமி, அருளானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story