தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மாநகராட்சிகளில் அனைத்து பணிகளையும் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்குவதற்கான அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

மனு கொடுத்தனர்

இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில், தூய்மை பணியாளர்கள் மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story