துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு துப்புரவு தொழிலாளர் நல சங்க தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட 126 தொழிலாளர்கள் கலந்துகொண்டு பட்டுக்கோட்டை நகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் தூய்மைப்பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். விதிமுறைப்படி முழுமையான சம்பளத்தை தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story