தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மதுரையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை


கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்கிட வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட வேண்டும், மருத்துவ வசதி, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், அடையாள அட்டை, பணிக்கருவிகள், சீருடை, காலனி, வண்டி, டப்பா, கரண்டி ஆகியவை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பொன். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி கலெக்டரிடம் வழங்கினர்.


Next Story