தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி பஸ் நிலைய பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர் கண்ணன், நேற்று முன்தினம் இரவு தூய்மை பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த செல்வானந்தம் நகர் பகுதியை சேர்ந்த சிவா என்பவர், தூய்மை பணியாளர் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும்,பணி பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க நகர செயலாளர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ரகுபதி, சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் முரளி, தூய்மை பணியாளர் சங்க நகரத் தலைவர் வினோத் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து மன்னார்குடி போலீசார் தூய்மை பணியாளரை தாக்கிய சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story