தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்


தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 1:18 AM IST (Updated: 13 July 2023 5:11 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

தஞ்சாவூர்

தனியார் நிறுவன கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணத்தில் உள்ள 48 வார்டுகளிலும் தூய்மை பணி நிறுத்தப்பட்டது.

தூய்மை பணியாளர்கள்

கும்பகோணம் மாநகராட்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 415 பேர் தற்காலிக பணியாளர்கள், 80-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்களாக உள்ளனர். கடந்த 10 நாட்களாக இந்த பணி மற்றொரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தூய்மைப்படுத்தும் பணி புதிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தூய்மை பணியை மேற்கொள்ள பொறுப்பெடுத்த புதிய தனியார் நிர்வாகம் ஊழியர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகாருக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனது.

முற்றுகை போராட்டம்

இதனால் நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கும்பகோணம் மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணத்தில் உள்ள 48 வார்டுகளிலும் நேற்று தூய்மை பணிகள் நடைபெறவில்லை.


Next Story