தூய்மை பணியாளர்கள் போராட்டம்


தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 2:00 AM IST (Updated: 6 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை நகராட்சியில் 37 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் கீழ் 60 பெண்கள் உள்பட தற்காலிக தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 166 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நிர்ணயிக்கப்பட்ட குழு தினசரி ஊதியமாக ரூ.606 வழங்க உத்தரவிடப்பட்டது. தற்போது தனியார் நிறுவனம் தினக்கூலியாக ரூ.571 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அரசு நிர்ணயித்த ரூ.606 ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் பணிகளை புறக்கணித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.589 வழங்கப்படும். உடை, உபகரணங்கள் போன்றவற்றுக்கு பிடித்தம் செய்யப்படும் ரூ.50 குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமரம் ஏற்பட்டதால் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.


Related Tags :
Next Story