பேரூராட்சியில் தூய்மை பணிகள்

முக்கூடல் பேரூராட்சியில் தூய்மை பணிகள் நடந்தது.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடல் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடந்தது. பேரூராட்சி தலைவர் ராதா தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.முக்கூடல் கோரங்குளத்தின் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு இடங்களில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story






