மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

தெற்கு கள்ளிகுளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முதல்வர் ராஜன் வரவேற்று பேசினார். நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரி தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார் கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக நெல்லை வன பாதுகாவலர் மற்றும் களஇயக்குனர் எ.எஸ்.மாரிமுத்து கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு சுற்றுச்சூழல் வனம், மற்றும் இயற்கை பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார். நாங்குநேரி வனச்சரக அதிகாரி எம்.பலவேச கண்ணன் மற்றும் வனவர்கள், மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க இயக்குனர்கள், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஹரிகிருஷணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 35-37 அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story