மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
குன்னூர்,
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்புகளுக்கான இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் 75-வது ராணுவ தினத்தை நினைவுகூரும் வகையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. (மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ மையம் மற்றும் தக்ஷின் பாரத் ஏரியாவின் தலைமையகத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா வெலிங்டனில் நடைபெற்றது. விழாவை எம்.ஆர்.சி. ராணுவ மைய கமாண்டெண்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் தொடங்கி வைத்தார். அப்போது பூமியை பசுமையாகவும், தூய்மையாகவும் வைக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வெலிங்டன் கன்டோன்மென்ட்டை சுற்றி பல்வேறு இடங்களில் மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பூமியை பசுமையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. இதில் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அக்னிவீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.