மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 9 Jun 2023 6:46 PM GMT)

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா

தஞ்சாவூர்

கரம்பயம்:

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் 5000 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற உள்ளது. இதன்படி மரக்கன்றுகள் நடும் விழா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் நடந்தது.

விழாவுக்கு புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி தலைவர் ஜெய சுந்தரி வெங்கடாசலம், துணைத் தலைவர் லட்சுமி சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் முருகானந்தம், பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் ஆகியோர் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி எல்லையில் இருந்து ராஜா மடம் வழியாக ஈ. சி. ஆர். சாலையை சந்திக்கக்கூடிய இணைப்பு சாலையில் நாவல், புங்கை, அத்தி, வேம்பு, நீர் மருது, உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தனர். விழா ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை பட்டுக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story