மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் சார்பில், தனுஷ் எம்.குமார் எம்.பி. முன்னிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ், பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள், துணைப்பதிவாளர்கள், ஒன்றிய அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் கறவை மாடு வாங்குவதற்கான கடன்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவு சான்றிதழ், பால் விற்பனை முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டு வைத்தார். இதையடுத்து நவீன ஆவின் பாலகத்தை ஆய்வு செய்தார். அப்போது தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மல்லி ஆறுமுகம், ஆவின் பொது மேலாளர் ஷைக் முஹம்மது ரபி, துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ், பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள், துணைப்பதிவாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.