மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் பகுதியில் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் தேசிய பசுமை படை மற்றும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இயற்கையின் மீதான ஆர்வம் மற்றும் மரம் வளர்ப்பதின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் மா, கொய்யா,நெல்லி, சீத்தா,எலுமிச்சை உள்ளிட்ட 5 வகையான மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் நசீர் அகமது, நிர்வாக இயக்குனர் அகமது தானிஷ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். இதில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story