சார்பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


சார்பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
x

நெமிலி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.

ராணிப்பேட்டை

தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பதிவுத்துறை சார்பில் நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நெமிலி சார் பதிவாளர் உதயன் தலைமை தாங்கினார். மாவட்ட பதிவாளர் வாணி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

இதில் பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், அரக்கோணம் சார் பதிவாளர் செந்தில்ரமணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் வெங்கடேசன், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story