ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா


ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
x

ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் கிராமத்தில் ஆர்.ஆர்.போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதையடுத்து காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு மரக்கன்று நடும் விழாவிற்கு கீரனூர் மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரேணுகா தலைமை தாங்கி பேசுகையில், இந்திய நாட்டிற்காக தனது வாழ்நாளையை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தி, அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரக்கன்றுகளை வழங்கி, காந்தியின் வாழ்நாள் நற்பெருமைகளை கூறினார். ஆர்.ஆர். போலீஸ் பயிற்சி பள்ளியின் பயிற்சி ஆசிரியர் சங்கீதா, உடற்கல்வி ஆசிரியர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை மாணவர்கள் வீரபாண்டியன், தீபா ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினர். விழாவில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story