மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தேனி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணைத் தலைவர் பிரியா தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆணையர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கடமலைக்குண்டுவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, நூலகம் ஆகிய இடங்களில் வேம்பு, கொய்யா, நாவல், புங்கம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற செயலர் சின்னச்சாமி செய்திருந்தார்.
Related Tags :
Next Story