மரக்கன்று நடும் நிகழ்ச்சி


மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x

தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 288 ஊராட்சிகளில் செஸ் போர்டில் உள்ள 64 கட்டங்கள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் 64 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் நேற்று நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story