மரக்கன்று நடும் நிகழ்ச்சி


மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி பகுதி விசாலாட்சி ஊரணி, பெரியகுளம் பகுதிகளில் நீர் நிலைகளை சுத்தப்படுத்தி பொதுமக்கள் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டினார். தூய்மை நகரங்களுக்கான மக்களின் இயக்கம் ஆணையாளர் (பொறுப்பு) லதா மற்றும் சுகாதார அலுவலர் ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பூங்கதை கருப்பையா தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story