மரக்கன்று நடும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சிட்கோ சிட்டியில் பசுமை இயக்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 50 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் முரளி கிருஷ்ணன், முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமை இயக்க தலைவர் குமார் வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லிங்கம்பட்டி மாடசாமி, இசக்கி, ராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். தினேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story