மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அரசு பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கடலூர்

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் சசிரேகா தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் முகமது யூனுஸ், முன்னிலை வைத்தார். பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை நகர தொழில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் தையல்நாயகி கணேசமூர்த்தி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சங்கர், ஆசிரியர்கள் உதயகுமார், சிவக்குமார், கலைச்செல்வன், பாலசந்தர், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.


Next Story