மரக்கன்றுகள் நடும் பணி


மரக்கன்றுகள் நடும் பணி
x

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மற்றும் நெடுஞ்சாலையை "எழில்மிகு பசுமைமிகு" நகரமாகவும் மற்றும் சாலையாகவும் மாற்றுவதற்காக கங்கை கொண்டான் டி.பி. சோலார் நிறுவனம், "விதைப்போம் வளர்ப்போம்" இயக்கம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நடைப்பயிற்சி நண்பர்கள் குழு "விதைப்போம் வளர்ப்போம்" இயக்கத்தின் தலைவர் சாத்தான்குளம் தாசில்தார் லெனின் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் மணிமாறன், ஆசிரியர் வேலாயுதம், புவியியல் ஆராய்ச்சி மைய இளங்கோ, வக்கீல் அன்பு (என்ற) அங்கப்பன், ஓய்வூதியர்கள் சின்ன பாண்டி, ஜெயசேகர், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கங்கை கொண்டான் டி.பி. சோலார் நிறுவன அலுவலர் மரியதாஸ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கே.டி.சி நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முதல் மேம்பாலம் வரை தெற்கு பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் ஐந்து வருடங்கள் உருவாக்கப்பட்ட 6 அடி முதல் 10 அடி வரையிலான புங்கை மற்றும் வேம்பு பெரிய வகையான 114 மரக்கன்றுகள் நடப்பட்டது.


Next Story