மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று


மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று
x

மனு கொடுக்க வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு 130 ஹெக்டர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றில்லாமல், பொதுமக்களும் தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதிய பயணம் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கும், பயனாளிகளுக்கும் கொய்யா மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் துணி பைகளும் வழங்கப்பட்டது.

1 More update

Next Story