பள்ளி, அரசு அலுவலகங்களில் வீணாகும் மரக்கன்றுகள்


பள்ளி, அரசு அலுவலகங்களில் வீணாகும் மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் மாறியதால் பராமரிக்காததால் பள்ளி, அரசு அலுவலகங்களில் ஏராளமான மரக்கன்றுகள் வீணாகும் நிைல ஏற்பட்டு உள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

கலெக்டர் மாறியதால் பராமரிக்காததால் பள்ளி, அரசு அலுவலகங்களில் ஏராளமான மரக்கன்றுகள் வீணாகும் நிைல ஏற்பட்டு உள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

வீணாகும் மரக்கன்றுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான மரக்கன்றுகளை வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நட்டு வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வேண்டும் என முன்பு இருந்த மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திட்டமிட்டு இருந்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு தேவையான விதைகள், மண், உரங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமே வழங்கின.

தற்போது கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து அவரது மரக்கன்று நடும் திட்டமும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட விதைகள் அனைத்தும் உரிய பராமரிப்பு இல்லாமல் கோடை வெப்பத்தால் கருகி பள்ளிகள், அரசு அலுவலகங்களில் வீணாகி கிடக்கின்றன. இதை மாவட்ட நிர்வாகமும், வழங்கிய அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

ஏராளமான மரக்கன்றுகளை நட்டால் இந்த மாவட்டம் பசுமையான மாவட்டமாகி சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு சுகாதாரமாகவும் மழை பொழிவதற்கும் ஏதுவாக இருக்கும். ஆனால் தற்போது அது வீணடிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த திட்டத்தை உயிர்பெறச் செய்து திட்டமிட்டபடி ஆகஸ்டு 15-ந் தேதி மாவட்டம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story