ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் சப்பர திருவிழா
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் சப்பர திருவிழா நடந்தது
சிவகங்கை
மானாமதுரை
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று ஆடி சப்பர திருவிழா நடந்தது. இதையொட்டி கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளினார். பின்னர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். சப்பரம் கோவிலை அடைந்தவுடன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சப்பரத்தின் முன்பாக தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story