சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி முன்பு தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதிகள் மிக குறைவாக உள்ளது. இதனால் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்கின்றனர். அவ்வாறு படியில் தொங்கி செல்லும் போது மாணவர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். மேலும் இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து அலுவலகத்திலும், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், கல்லூரி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இருந்து உள்ளூர், வெளியூர் என பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். எனவே மாணவர் நலன் கருதி தமிழக அரசு பஸ் வசதியை அதிக படுத்தி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.