அரிய வகை சருகு மான் பிடிபட்டது
வேப்பனப்பள்ளி அருகே அரிய வகை சருகு மான் பிடிபட்டது. அதை வனத்துறையினர் காப்புக்காட்டில் விட்டனர்.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடுத்தாரை கிராமத்தில் உள்ள சுடுகாட்டை கிராமமக்கள் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் புதரில் இருந்து அரிய வகை விலங்கு ஒன்று திடீரென்று ஓடியது. இதை கிராமமக்கள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்கள் ஆச்சரியத்துடன் அந்த விலங்கை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அரியவகை விலங்கை கிராமமக்களிடம் இருந்து மீட்டனர்.
அப்போது அந்த விலங்கு இந்தியாவிலேயே மிகவும் அரிய வகை சருகு மான் என்பதும், தற்போது இந்தியாவில் அழிந்து வரும் மான் வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிய வகை மானை பரிசோதித்த பின்னர் நாரளப்பள்ளி காப்புக்காடு வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
Related Tags :
Next Story