இந்திய ராணுவ பணிக்கு சிறுமுகை கல்லூரி மாணவி தேர்வு
இந்திய ராணுவ பணிக்கு தேர்வான சிறுமுகை கல்லூரி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை அருகே உள்ள ரேயான் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். டெய்லர். இவருடைய மனைவி அம்சவேணி. இவர்களது மகள் வசுந்தரா (வயது 20).
இவர் கோவை சி.எம்.எஸ். கல்லூரியில் பி.பி.ஏ. ஆண்டு படித்து வருகிறார்.
வசுந்தரா கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பணிக்கு விண்ணப்பித்தார்.
இதில் மும்பை ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
இதனையடுத்து அவர் இந்திய ராணுவத்தில் லோயர் டிவிஷனல் கிளார்க் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளன.
இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சிறுமுகை ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சிறுமுகை பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் நாகராஜ் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.