சாத்தான்குளம் பகுதி அம்மன் கோவில்களில் தசரா விழா கொடியேற்றம்


சாத்தான்குளம் பகுதி  அம்மன் கோவில்களில்   தசரா விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

சாத்தான்குளம் பகுதி அம்மன் கோவில்களில் தசரா விழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவில், தச்சமொழி முத்தாரம்மன் கோவில், வடக்குதெரு மாரியம்மன் கோவில், வண்டிமலைச்சியம்மன் சமேத வண்டிமலையான் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடிபட்டம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு குரு பூஜை, திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பக்தர்கள் விரதம் இருந்து கைகளில் காப்புக்கட்டி வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கையை பிரித்து செலுத்துவர். நிறைவு நாளில் படப்பு பூஜை, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


Next Story