சாத்தான்குளம் அரசு மகளிர்கல்லூரியில்முதுநிலை பட்டப்படிப்புகளுக்குமாணவியர் சேர்க்கை
சாத்தான்குளம் அரசு மகளிர்கல்லூரியில்முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கு. சக்தி ஸ்ரீ கூறுகையில், முதுநிலை ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் ஆகிய துறைகளுக்கான இணைய விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இளநிலை மதிப்பெண் பட்டியல்கள், கைபேசி, பணம் கட்டுவதற்காக ஏ.டி.எம் கார்டு அல்லது ஜிபே ஆகியவற்றோடு கல்லூரி வளாகத்தில் வந்து விண்ணபபப் படிவத்தை இணைய வழியில் செலுத்தலாம், என தெரிவித்துள்ளார். முன்னதாக மாணவி ஒருவருக்கு முதுநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் வழங்கினார்.
Related Tags :
Next Story