சாத்தான்குளம் வட்டார கோ-கோ, கபடி போட்டி:மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவிகள் சாதனை
சாத்தான்குளம் வட்டார கோ-கோ, கபடி போட்டியில் மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
மெஞ்ஞானபுரம்:
சாத்தான்குளம் வட்டார அளவிலான 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான கோ-கோ போட்டி மற்றும் கபடி போட்டிகள் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 14,17,19 ஆகிய 3 வயது பிரிவினருக்கான கோ-கோ போட்டியிலும் மெஞ்ஞானபுரம் எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். இதே போல் கபாடி போட்டியில் 17,19 ஆகிய வயது பிரிவிலும் இப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றள்ளனர். இதன் மூலம் இந்த மாணவிகள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் விமலா, உடற்கல்வி ஆசிரியர் டெய்சி அன்னமணி ஆகியோரை பள்ளி தாளாளர் சசிகுமார், தலைமைஆசிரியர் ஜேஸ்மின் ஜோன் செல்லினா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோன்று, கைப்பந்து போட்டியில் மாணவர் அன்டன் பிரபாகரன் தலைமையிலான மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணிஸ், அண்டனி, ஜெபிசன், ஆலன், கிராஸ், ரிவாஸ்கர், பிரபஞ்சன், ஜோர்வின், தினேஸ்வின், ஆரோன், ஜெரோபின் ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்தது. இந்த சாதனை மாணவர்களையும், உடற்பயிற்சி ஆசிரியை உஷாவையும், பள்ளித் தாளாளர் லெரின் டிரோஸ், பள்ளி தலைமையாசிரியை லூர்து எட்வின் பிளாரன்ஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவியர் பாராட்டினர்.