ஒலிம்பியாட் தேர்வில் சாத்தான்குளம் பள்ளி மாணவர் வெற்றி


ஒலிம்பியாட் தேர்வில் சாத்தான்குளம் பள்ளி மாணவர் வெற்றி
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பியாட் தேர்வில் சாத்தான்குளம் பள்ளி மாணவர் வெற்றி பெற்று உள்ளார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் தேர்வு கடந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் இணையதளம் மூலம் நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சுப்பிரமணியவர்சன், மாநில அளவில் 147-வது ரேங்க் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் முதல்வர் நோபிள்ராஜ், பள்ளி இயக்குனர் டினோமெலினா ராஜாத்தி, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ேடார் பாராட்டினர்.


Next Story