சாத்தான்குளம்-உடன்குடி குடிநீர் திட்டம்:குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்


சாத்தான்குளம்-உடன்குடி குடிநீர் திட்டம்:குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

சாத்தான்குளம்-உடன்குடி குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம்-உடன்குடி கூட்டு குடிநீர் திட்டக்குழாய் கருமேனியாற்று பாலத்திற்கு கீழ் பகுதியில் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் அந்த பாலத்திற்கு கீழே கொண்டு செல்லப்படும் குழாயில் பல மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இந்த குழாய் உடைப்பில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது பரவலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக இந்த குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தி, குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story