சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி


சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை வனக்கோட்டத்தில் சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை வனக்கோட்டத்தில் சாட்டிலைட் உதவியுடன் தீ பரவல் தடுப்பு பணி நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

காட்டுத்தீ பரவல்

கோவை மாவட்டத்தில் வெயில் காலம் தொடங்க உள்ளது. இதனால் கோவை வனக்கோட்டத்தில் வறட்சி, வெயில் தாக்கம் காரணமாக காட்டுத்தீ பரவு வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்கவும், முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீ பரவல் தடுப்பு, வனபாதுகாப்பு, வன விலங்குகளுக் கான தீவனங்கள், குடிநீர் வசதி போன்றவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:-

கோவை, ஆனைமலை வனக்கோட்டத்தில் காட்டு தீ பரவல் தடுக்க தேவையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலும் தீ தடுப்பு காவலர் களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

காட்டு பகுதியில் தீ பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும் என செயல் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

140 தீத்தடுப்பு காவலர்கள்

தீ பிடிக்க வாய்ப்பு உள்ள பகுதிகளில் 140 தீத்தடுப்பு காவலர்க ளுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள், சாட்டிலைட் உதவியுடன் எந்த காட்டில் எவ்வளவு தூரம் தீப்பிடித்து பரவி இருக்கிறது என கண்டறிய முடியும். தீப்பிடித்து இருந்தால், வனத்தில் பணியாற்றும் 140 பேருக்கு செல்போனில் தகவல் வந்து விடும்.

அந்த இடத்திற்கு உடனடியாக ஊழியர்கள் சென்று தீ அணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

வன எல்லைப்பகுதி ரோட்டோரத்தில் தீப்பிடித்தால் தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்த முடியும். காட்டிற்குள் தீப்பிடித்தால் செடி, கொடிகளை பயன்படுத்தி தீயை அணைக்க முடியும்.

மண்டல அளவில் தீ பரவல் தடுக்க தீத்தடுப்பு கோடுகளை (பயர் லைன்) சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

உணவு, தீவனம்

மண்டல அளவில் 25 வனப்பகுதியில் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. அங்கு தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. காட்டுப்பகுதியில் வன விலங்குகளின் நீர் தேவைக்காக 40 இடங்களில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தொட்டிகளில் சோலார் போர்வெல் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி நடக்கிறது. வன விலங்குகளுக்கு தண்ணீர், தீவனம் கிடைக்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story