கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ. மீது வழக்கு


கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ. மீது வழக்கு
x

கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சதாசிவம் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்

கொளத்தூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு காவேரிபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கட்சியின் சுவர் விளம்பரத்தை வரைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பா.ம.க.வை சேர்ந்த ராஜா என்பவர் அதனை தடுத்ததாக தெரிகிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இளையராஜா ெகாளத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பா.ம.க.வை சேர்ந்த ராஜா உள்பட 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பா.ம.க.வினரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கொளத்தூர் அருகே கருங்கலூரில் பா.ம.க. ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பா.ம.வை சேர்ந்த சதாசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும்போது மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சதாசிவம் எம்.எல்.ஏ. மீது மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியதாகவும், வன்முறையை தூண்டும்விதமாக பேசியதாகவும் 2 பிரிவுகளின் கீழ் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story