சாத்தியார் அணை நிரம்பியது


சாத்தியார் அணை நிரம்பியது
x

சாத்தியார் அணை நிரம்பியது

மதுரை

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடு மேற்கு பகுதியில் வகுத்து மலை, சிறுமலை, மஞ்ச மலை, செம்பூத்து மலை தொடர்ச்சிகளில் அமைய பெற்றுள்ளது சாத்தியார் அணை. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் தற்போது நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையினால் அணைக்கு விநாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இந்த அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்த அணையிலிருந்து வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அணையின் கொள்ளளவு 29 அடி நீர்மட்டம் நிறைந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது.

அணை பகுதிக்கு வரும் மழை நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டும், மதகுகளையும் சரிபார்க்கும் பணியிலும் அணையின் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள், நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த அணை முழுவதுமாக நிரம்பி வழிந்ததால் இப்பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2021-ம் ஆண்டு நவம்பர், கடந்த ஜனவரி மாதத்திலும் இந்த அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story