சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் செபத்தியாள் என்ற ஜெயா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை தலைவர் லட்சுமி, நிர்வாகிகள் மருதுபாண்டி, குட்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
வருவாய் கிராம ஊழியருக்கு இணையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750, அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அரசு துறை காலி பணியிடங்களில் தகுதி உள்ள சத்துணவு ஊழியர்களை சேர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
இதில் மாநில செயலாளர் பிச்சுமணி, மாவட்ட நிதி காப்பாளர் பிச்சையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல், மாவட்ட தலைவர் கற்பகம், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களது கண்களில் கருப்பு துணி கட்டியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.