சத்தியமங்கலத்தில்குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலத்தில் குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி 19-வது வார்டுக்கு உள்பட்ட கோட்டுவீராம்பாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோட்டுவீராம்பாளையளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அதிகாரிகள் கூறும்போது, 'குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் உள்ள வால்வில் திடீரென பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. பழுது சரி செய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.