கோவையில் குவியும் சாத்துக்குடி பழங்கள்
கோவையில் குவியும் சாத்துக்குடி பழங்கள்
கோவை மாவட்டத்திற்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ரம்பூட்டான், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சாத்துக்குடி பழங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வைசியாள் வீதியில் உள்ள பழ மண்டிக்கு மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பழ மண்டிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ஆந்திராவில் இருந்து தினமும் 3 டன் முதல் 5 டன் வரை சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பழங்கள், மொத்த விற்பனையில் கிலோ ரூ.30 முதல், ரூ.35-க்கும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் என்பதால், கடந்த மாதங்களை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கும் இந்த பழங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.