நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவராக சதீஷ்குமார் வெற்றி
ஊரக உள்ளாட்சியில் காலி இடங்களுக்கு நடந்த தேர்தலில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக சதீஷ்குமார் வெற்றி பெற்றார்
கிணத்துக்கடவு
ஊரக உள்ளாட்சியில் காலி இடங்களுக்கு நடந்த தேர்தலில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக சதீஷ்குமார் வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த நெம்பர் 10. முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, குருநல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில் நெம்பர்.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர். இதற்காக நெம்பர்10 முத்தூர் ஊராட்சியில் 3 வாக்குச்சாவடிக ளிலும், குருநல்லிபாளையம் 4-வது வார்டுக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
தேர்தலின் போது பதிவான வாக்கு பெட்டிகள் பூட்டி சீல் வைக் கப்பட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னி லையில் அறை திறக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
அங்கு காலை 8 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தன லட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் மற்றும் வேட்பாளர்கள் முன்னி லையில் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட் டன. அதைத்தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது.
அங்கு போடப்பட்டு இருந்த 2 டேபிள்கள் போடப்பட்டு இருந் தது. அதில், ஒரு மேஜையில் குருநல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பதிவான வாக்குகளும், மற்றொரு மேஜை யில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான வாக்குச் சீட்டுகள் சின்னம் வாரியாக பிரித்து எடுக்கப்பட்டு எண்ணப்பட்டன.
நெம்பர்10 முத்தூர் ஊராட்சி
இதில் குருநல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 233 வாக்குகள் பதிவாகின. இந்த பதவிக்கு போட்டி யிட்ட தாமோதரன் 123 வாக்குகளும், பேச்சிமுத்து 103 வாக்குக ளும், 7 செல்லாத வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் 20 வாக்குகள் வித்தியாசத்தில் தாமோதரன் வெற்றி பெற்றார்.
அதேபோல் நெம்பர்10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மொத்தம் 1,679 வாக்குகள் பதிவாகின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சதீஷ்குமார் 879 வாக்குகளும், மஞ்சு சவுமியா 765 வாக்குகளும் பெற்றனர். 35 செல்லாத ஓட்டுகள் பதிவானது.
சதீஷ்குமார் 114 வாக்குகள் அதிகம் பெற்று நெம்பர் 10 முத்தூர் ஊராட்சிதலைவர் பதவியை கைப்பற்றினார். வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், 4-வது வார்டு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரண் டனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் கிணத்துக்க டவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியம்
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெற்கு ஒன்றியம் சிங்காநல்லூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகன், ஆனை மலை ஒன்றியம் வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிரவீன்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் வடக்கிபாளையம் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். அதற்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான ஓட்டுகள் வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 316 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் வேட்பாளர் பிரபு 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.