இந்திய கைப்பந்து அணிக்கு சாத்தூர் மாணவி தேர்வு


இந்திய கைப்பந்து அணிக்கு சாத்தூர் மாணவி தேர்வு
x
தினத்தந்தி 6 Jun 2022 7:31 PM GMT (Updated: 2022-06-07T10:26:07+05:30)

இந்திய கைப்பந்து அணிக்கு சாத்தூர் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவாதிகா (வயது 17). இவர் இவர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 8-வது படிக்கும்போதே தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதை அறிந்து தமிழ்நாடு அணியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தேனி விளையாட்டு விடுதியில் தங்கி கைப்பந்து பயிற்சி பெற்று வந்தார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய கைப்பந்து அணிக்கான தேர்வு ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற தேர்வில் இந்திய கைப்பந்து அணிக்காக சுவாதிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தாய்லாந்தில் நடைபெறும் 14-வது 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக இவர் விளையாடுகிறார்.

இதுகுறித்து சுவாதிகா கூறியதாவது:-

இந்திய அணிக்காக தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய திறமையை அறிந்து என்னை திறம்பட கைப்பந்து விளையாட உறுதுணையாகவும், ஊக்கத்தையும் கொடுத்த எனது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பயிற்சியாளர் முகமது தவுபிக், தேனி மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி முருகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


Next Story