தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட முகாம் தொடக்கம்
தபால் அலுவலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூரில் தபால் அலுவலகத்தில் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் 'அகவை 60 அஞ்சல் 20' சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது. அஞ்சலக அதிகாரி மருதமுத்து முன்னிலையில் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக நல்லப்பன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புதிதாக கணக்கை தொடங்கியவர்களுக்கு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது. இக்கணக்கின் மூலம் பலனடைந்தவர்கள் அதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினர். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story