மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் சவிதாஶ்ரீ


மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் சவிதாஶ்ரீ
x

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ இந்தியாவின் 25 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடந்த அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக் ஹெட்மன்-ஐ வீழ்த்தி இந்தியாவின் 25வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.

இதன் மூலமாக இந்தியாவின் மிக குறைந்த வயதை கொண்ட கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரின் தற்போதய வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ரக்ஷிதா ரவி என்ற மற்றொரு தமிழக வீராங்கனை 24 வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமே இரண்டு மகளிர் க்ராண்ட்மாஸ்டர்கள் உள்ளார்கள் என்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை ஆகும்.

1 More update

Next Story