பகுதி நேர வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்குகளை பெற்று மோசடி செய்யும் கும்பல்


பகுதி நேர வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி  வங்கி கணக்குகளை பெற்று மோசடி செய்யும் கும்பல்
x

பகுதி நேர வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்குகளை பெற்று மோசடி செய்யும் கும்பலிடம் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில் தான் செல்போன் செயலி மூலம் ரூ.3500 கடன் பெற்றேன். அதற்காக அவர்கள் எனது ஆதார் எண், செல்பி போட்டோ ஆகியவை கேட்டனர். இதனை ஏற்று நான் கடன் பெற சம்மதித்தேன். செல்போன் செயலி மூலம் வாங்கி கடனை நான் 7 நாட்களில் ரூ.5 ஆயிரமாக திருப்பி செலுத்தினேன். ஆனாலும் அவர்கள் மேலும் பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் உங்களது போட்டோவை மார்பிங் செய்து செல்போன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைப்போம் என்று மிரட்டுகின்றனர் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் செயலி மூலம் பெற்ற கடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்தக் கணக்கு எண் யாருடையது என்று விசாரித்த போது அது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரின் வங்கி கணக்கு என்று தெரியவந்தது. இதனை அடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தர்மபுரி விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்து செயல்படும் இந்த கும்பல் வாலிபர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். எனவே அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story