டெண்டர் முறைகேடு...எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.!


டெண்டர் முறைகேடு...எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.!
x

எஸ்பி வேலுமணி தொடர்புடைய மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர் வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எஸ்பி வேலுமணி, அப்போதைய மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை என அறப்போர் இயக்கம் தொடுத்த மனுவில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, முறைகேடு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்டையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிபதிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மாநில அரசு தான் எடுக்க வேண்டும் என்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story